[X] Close

கத்தரிக்காய் ரசவாங்கி இப்படித்தான்!


rasavaangi

கத்தரிக்காய் ரசவாங்கி

  • வி.ராம்ஜி
  • Posted: 01 Aug, 2018 12:02 pm
  • அ+ அ-

ரசம் தெரியும். ரசித்து ருசித்துச் சாப்பிட்டிருப்போம். அதென்ன ரசவாங்கி. வீட்டில் செய்யாமல், எதிர்த்த, அடுத்த வீடுகளில் ரசம் வாங்குவதுதான் ரசவாங்கியா என்று கேலியும் குழப்பமும் மிஞ்சலாம், பலருக்கும்!

ஆனால், சாம்பார் போல, குழம்பு போல ரசவாங்கி எனும் ஒரு வகை உண்டு. அது அசத்தல் ரகம் என்கிறார்கள். அவர்கள் யாரென்று சொன்னால்தான் தெரியுமா உங்களுக்கு? வேறு யார்... அவர்கள் ரசவாங்கி ரசிகர்கள்.

சரி... ரசவாங்கி செய்ய என்னென்ன தேவை?

கத்தரிக்காய் போட்ட ரசவாங்கி, ரொம்பவே ஸ்பெஷல். எனவே கத்தரிக்காய் ரசவாங்கிக்குத் தேவையானவை என்ன என்று பார்ப்போம்.  

பிஞ்சுக் கத்தரிக்காய் - 1/4 கிலோ

புளி - ஒரு எலுமிச்சை அளவு

துவரம் பருப்பு - 2 கப் (வேகவைத்தது),

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

கடலைப் பருப்பு - 1/4 கப்

தனியா -  போதிய அளவு

காய்ந்த மிளகாய் - 8

தேங்காய் - 1/2 மூடி

எண்ணைய் - தேவையான அளவு

தாளிக்க - கடுகு , கறிவேப்பிலை,

உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

  • கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
  • வறுபட்டதும் தேங்காய்த் துருவலைப் போட்டு லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • கத்தரிக்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு புளிக்கரைசலை விட்டுக் கொதிக்கவிடுங்கள்.
  • கத்தரிக்காய் வெந்ததும் ஏற்கெனவே ரெடியாக வைத்திருக்கிற வெந்த பருப்பைப் போடவேண்டும்.
  • பிறகு, அரைத்த விழுதைப் போட்டு சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி கடுகு, கறிவேப்பிலை, தாளித்துக் கொட்டவும்.

இப்போது சாதத்திற்கு, ரசவாங்கியை ஊற்றிக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு, என்ன சமைக்கணும் என்று வீட்டில் கேட்டால், ரசவாங்கி பண்ணு என்று சொல்வீர்கள். கொஞ்சம் ரசவாங்கி போடு என்று கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவீர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close