[X] Close

கொத்ஸு... இட்லி, தோசைக்கு சூப்பர் ஜோடி!


kothsu

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Jul, 2018 14:35 pm
  • அ+ அ-

எப்பப் பாத்தாலும் இட்லி தோசை, இட்லிதோசை. சரி போய்த்தொலையுதுன்னா, அதுக்கு தேங்காய்ச்சட்னி, காரச்சட்னி. ச்சே... வாழ்க்கை செம போருப்பா... என்று அலுப்பும்சலிப்புமாகப் பேசுகிறவர்களின் உலகம் இது.

வீட்டுக்குவீட்டு வாசப்படி உண்டோ இல்லையோ.. ஆனால் கிச்சனுக்குக் கிச்சன், இந்த இட்லிதோசை பஞ்சாயத்து பெரும்பஞ்சாயத்துதான்.

‘சொன்னாக்கேளுங்க... நல்லா வக்கணையா ஆயில் ஐட்டமாச் சாப்பிட்டு சாப்பிட்டு கொலஸ்ட்ரால் (கொழுப்புன்னா சொன்னா, கைகலப்பே ஏற்படலாம் என்பதால், ஓர் ஜாக்கிரதை உணர்வு) ஏறினதுதான் மிச்சம். இட்லி, தோசைன்னா அப்படிப் பண்ணாது. வயித்துக்கும் கெடுதல் இல்ல என்று கிச்சனில் இருந்து அம்மாவோ, மனைவியோ டாக்டர் போல் பேசுவதெல்லாம், நம் தமிழ் கூறும் நல்லுலகில் சாதாரணமப்பாதான்!

தேங்காய் சட்னி, மஞ்சக்கலரு தே.சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என்பதையெல்லாம் கடந்து, ‘இன்னும் ரெண்டு இட்லி வை’ என்று வீட்டார் சொல்லும் அளவுக்கான சைடு டிஷ்... கொத்ஸூ என்கிறார்கள், அதன் ரசிகர்கள். 

கொத்ஸுக்கு வீட்டுக்கு ரெண்டுபேர், தெருவுக்கு பத்துப்பேர், ஏரியாவுக்கு நூறுபேர், ஊருக்கு ஆயிரம் பேர் என்று இருக்கிறார்கள். ‘வீட்ல எப்பதான் கொத்ஸூ பண்ணுவாங்களோ’ என்று ஏங்கித் தவிப்பவர்களும் நாக்குத் தவிப்பவர்களும் ஏராளம்.

சரி... கொத்ஸு புராணம் பாடாமல், கொத்ஸு எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?

 

கத்தரிக்காய் - ஏழு கத்தரிக்காய் (கால்கிலோ அளவு)

கத்தரிக்காய் - உள்ளங்கை நீளத்துக்கு குண்டுக் கத்தரிக்காய் இன்னும் பெட்டர்

பெரிய வெங்காயம்  - 2

புளி  - 2 எலுமிச்சை அளவு

தேங்காய்ப்பூ   - 2 டேபிள் ஸ்பூன்

பச்சைமிளகாய் -  ஆறு அல்லது ஏழு

மஞ்சள்தூள்  - அரை தேக்கரண்டி

பெருங்காயம்  - அரை ஸ்பூன் (பவுடர்)

உப்பு      - போதிய அளவு

கடுகு, உ.பருப்பு   - ஒரு தேக்கரண்டி

எண்ணெய்   - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை  - கொஞ்சமேனும்

கொத்ஸு... இப்படித்தான்!

கொஞ்சமேனும் முதலில் கத்தரிக்காயை சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து பிறகு நன்றாக ஆறவையுங்கள்.  புளியை ஊற வைத்து நன்றாகக் கரைத்து வைத்திருக்கிறீர்கள்தானே!

வெங்காயத்தை பொடிப்பொடியாக நன்றாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகாயுடன் தேங்காய்ப்பூவும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இந்நேரம் கத்தரிக்காய் நன்றாக ஆறியிருக்கும். இப்போது மிக்ஸியில் அதையும் அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விடுங்கள். கடுகு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாகத் தாளித்துவிடுங்கள். பெருங்காயத்தை எடுத்து பொரியவிடுங்கள். வெங்காயம் நறுக்கி வைத்திருக்கிறீர்கள்தானே. அதை இட்டு நன்றாக சிவக்கச் சிவக்க வதக்குங்கள். கரைத்து வைத்த புளித்தண்ணீரை அதில் ஊற்றி, அரைத்தெடுத்த் கத்தரிக்காய், பச்சைமிளகாய், தேங்காய் விழுது என்பதைச் சேர்த்து, அப்படி உப்பைப் போடுங்கள். நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.

பிறகென்ன... இட்லி, தோசை, பொங்கலுக்கு கொத்ஸு செம காம்பினேஷன்! இன்னொரு ரகசியம்... இந்த இட்லி, தோசை, பொங்கலில் ஏதேனும் குற்றம்குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் சமன் செய்து, சமாளித்து, நம் கண்ணையே... ஸாரி... நம் நாக்கையே ஏமாற்றிவிடும் வல்லமைமிக்கது கொத்ஸு!

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close