[X] Close

தஞ்சாவூர் உருண்டைக் குழம்பு


tanjore-urundai-kuzhambu

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Jun, 2018 16:23 pm
  • அ+ அ-

தஞ்சாவூர்த் தட்டு தெரியும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் பார்த்திருப்போம். தஞ்சாவூர் திருவையாறின் அசோகாவையும் சுவைத்திருப்போம். தஞ்சையின் உருண்டைக் குழம்பு தெரியுமா? சுவைத்திருக்கிறீர்களா?

தஞ்சாவூர் உருண்டைக் குழம்பு செய்வது ரொம்பவே ஈஸி. 

தேவையானவை இதுதான்!

துவரம்பருப்பு - 200 கிராம்

சின்ன வெங்காயம் 200 கிராம்

சோம்பு - ஒரு ஸ்பூன்

மிளகாய்த்தூள் - காரத் தேவைக்கு ஏற்ப.

மல்லித்தூள் - இதுவும் தேவைக்குத் தகுந்தபடி.

எண்ணெய்  - அதுவும் அப்படியே.

தேங்காய்  - அரை மூடி

புளி - சிறிய அளவு

பூண்டு மூன்று அல்லது நான்கு பல்

தக்காளி - இரண்டு அல்லது மூன்று

உப்பு   - தேவையான அளவு.

வெந்தயம் - ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை - கொஞ்சமாக.

இப்படித்தான் செய்யணும்!

துவரம் பருப்பை சுமார் ஒருமணி நேரத்துக்கு முன்னதாக நன்றாக ஊறைவைத்துக்கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டிவிடுங்கள்.

 மிக்ஸியில், உப்பையும் பூண்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வடைக்கு அரைக்கிற பதத்தில், நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலுடன் சோம்பு சேர்த்து, நன்றாக பொடிபட அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அரைத்து வைத்திருக்கிற பருப்புடன் 100 கிராம் அதாவது பாதியளவு சின்னவெங்காயத்தையும் சேருங்கள். இன்னொரு விஷயம்... முருங்கைக் கீரையை கூடுதலாகப் பயன்படுத்தினால், சுவையும் கூடுதலாக இருக்கும். நன்றாகப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, இட்லி பானையில் வைத்து நன்றாக அவியவிடுங்கள். ஆவி வந்ததும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து, அடுப்பில் பாத்திரம் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகப் போட்டு,நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு சிறிது மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து, புளிக்கரைசலையும் ஊற்றிச் சேருங்கள்.

தேவைக்குத் தகுந்தபடி தண்ணீர் விட்டு கொதிக்கவிடுங்கள். இரண்டு கொதி வந்ததும் அவித்து ரெடியாக வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை போடுங்கள்.  சில நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பில் இருந்து இறக்குங்கள்.

 அவ்வளவுதான்... சுடச்சுட... மணக்க மணக்க, திகட்டவே திகட்டாத தஞ்சாவூர் உருண்டைக் குழம்பு ரெடி!

சுடச்சுட சாதம், மணக்க மணக்க உருண்டைக் குழம்பு, கூடவே அப்பளமோ வடாமோ... நாலு கை சேர்த்துச் சாப்பிடுவீர்கள்!  

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close