[X] Close

எம்ஜிஆருக்குப் பிறகு அஜித் தான்: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்


rbudayakumar-speech-about-ajith

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 20:07 pm
  • அ+ அ-

எம்ஜிஆருக்குப் பிறகு அஜித் தான் என்று ‘பில்லா பாண்டி’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசினார்

ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’. இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு ‘சர்கார்’ படத்துடன் இப்படமும் வெளியாகவுள்ளது.

‘பில்லா பாண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, விவேக், கருணாஸ், சீமான், தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:

நான் போன் செய்தால் அவர் இல்லையென்றால் கூட கொஞ்ச நேரத்தில் திருப்பி அழைப்பவர் இருவர்தான். ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் அஜித். ஒருமுறை அவருக்கு போன் செய்தேன். லைன் பிஸி. பின்னர் சுரேஷ் சந்திரா கால் செய்தார். அஜித் சாருக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனை சென்றுள்ளார். என்ன விஷயம் என்று கேட்க சொன்னார். 

அதற்கு நான் “ஒரு படம் பார்த்தேன். எத்தனையோ ஹீரோக்கள் நடித்த படங்கள் பார்த்துள்ளேன். ஒரு ஹீரோவுக்காக ஒரு படம் எடுக்கப்பட்டதை இப்போதுதான் பார்த்தேன். தல ரசிகன் என்பவன் எவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்டவன் என்பதை இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். 

அஜித் இந்தப் படத்தை பார்க்கணும் என்று கூறினேன். அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த படத்தை எப்படியாவது உங்கள் தலயை பார்க்க சொல்லுங்கள். இந்த படத்தை பார்த்தால் இந்த படத்தின் க்ளைமேக்ஸில் தானும் நடிக்க வேண்டும் என்று அஜித் நினைப்பார். 
இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எங்கே?. ஒருவராவது வந்து வாழ்த்து சொன்னார்களா? நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். சிறிய படங்களை ரிலீஸ் செய்யமுடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் நல்ல புரிதல் இல்லாததே காரணம். 

சிறிய படங்களில் நடித்ததால் தான் ரஜினி இன்றைக்கு சூப்பர் ஸ்டார். இன்றைக்கு சினிமா துறையை காப்பாற்ற நல்ல தலைவர்கள் இல்லை. அப்போது எம்ஜிஆர் இருந்தார். ஒரு ஸ்ட்ரைக் நடந்ததில்லை. அனைவருக்கும் ஒரே வகையான சாப்பாடு என்று அறிவித்தது அவர்தான். அவருக்கு பிறகு அஜித் அதை செய்கிறார் என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசினார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close