[X] Close

அஜித் மீது ரசிகர்களுக்கு வெறித்தனமான காதல் ஏன்? - விவேக் சொல்லும் காரணம்


why-fans-loved-ajith-vivek-reveals

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 19:38 pm
  • அ+ அ-

அஜித் மீது ரசிகர்களுக்கு வெறித்தனமான காதல் ஏன் என்பதற்கான காரணத்தை ‘பில்லா பாண்டி’ இசை வெளியீட்டு விழாவில் விவேக் தெரிவித்தார்

ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’. இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு ‘சர்கார்’ படத்துடன் இப்படமும் வெளியாகவுள்ளது.

‘பில்லா பாண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, விவேக், கருணாஸ், சீமான், தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:

இந்த படத்தின் ஹீரோ சுரேஷ் எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை. ஆனால் பட போஸ்டரில் அவர் அணிந்திருக்கும் பனியனில் இருப்பவர் (அஜீத்) எனக்கு 25 வருட பழக்கம். 

எல்லாரும் நினைப்பீர்கள் வாலி படத்திலிருந்துதான் அவரை எனக்கு தெரியுமென்று. அதற்கு முன்னால் மைனர் மோசஸ் என்று ஒரு படம். அப்போதிலிருந்து எனக்கு அவரை தெரியும். அன்று பார்த்த அஜீத் வேறு.. இன்று பார்க்கும் தல வேறு.. படத்தில் சுரேஷ் அஜீத்தை பனியனில் வைத்திருக்கிறார். ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பனியனுக்குள் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். 

அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் இவர் மீது இப்படி வெறித்தனமான காதல் என்று யோசித்து பார்க்கிறேன். அவரிடம் கேட்டால் தெரியாது என்று சொல்வார். அவர் அப்படி சொல்லலாம். ஆனால் எனக்கு தெரியும். தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி, விழ விழ எழுதல், எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் அதையும் தாண்டி நின்று காட்டுவது ஆகியவைத் தான் காரணம்.

1990, 2000ல் எல்லாம் ராஜ்கிரண் சார் நிறைய கிராம படங்கள் செய்தார். ஒரு ஹீரோ ஜெயிக்க வேண்டுமென்றால் சிட்டியில் ஜெயித்தால் போதாது. கிராமத்தில் ஜெயிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் மாஸ் ஹீரோவாக வரமுடியும். தலயும் மாஸ் ஹீரோதான் தளபதியும் மாஸ் ஹீரோதான். இப்போது கிராமத்து கதைகள் செய்ய ஆள் இல்லை. அதை நிச்சயமாக சுரேஷ் நிரப்புவார். 

இந்த படத்தின் இயக்குனர் ராஜா சேதுபதி என் நண்பர் மட்டுமல்ல என் உறவினரும் கூட. இவருடைய போராட்டத்தை 25 வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் மூலம் பல உயரங்களை தொடப் போகிறார். தல யை நெஞ்சில் சுமந்து வரும் பில்லா பாண்டியை ரசிகர்கள் வெற்றிப் படமாக்க வேண்டும்.

இவ்வாறு விவேக் பேசினார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close