[X] Close

துணிச்சலுடன் பேசிய பெண்களுக்கு துணை நிற்கிறேன்: மீ டூ பிரச்சாரத்துக்கு சாயிஷா ஆதரவு


sayyeesha-supports-metoo-campaign

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 19:23 pm
  • அ+ அ-

துணிச்சலுடன் பேசிய பெண்களுக்கு துணை நிற்கிறேன் என்று தெரிவித்து மீ டூ பிரச்சாரத்துக்கு சாயிஷா ஆதரவு தெரிவித்திருக்கிறார்

கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். 

கடந்த வருடம் ஹாலிவுட்டில் அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அதே பாணியில் தற்போது இந்திய திரையுலகில் உள்ளவர்கள் #Metoo என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசி வருகிறார்கள்.

#Metoo-க்கு பல்வேறு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நிறைய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆண்டாண்டு காலமாக அழுத்திவைத்த  வேதனையான அனுபவங்களைப் பகிர்வதற்கு ஆழ்ந்த தைரியம் தேவை. துணிச்சலுடன் பேசிய பெண்களுக்கு நான் துணை நிற்கிறேன். அதேவேளையில் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆண்களின் நேர்மைக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு சாயிஷா தெரிவித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close