[X] Close

மூன்று பாகங்களாக 'வட சென்னை', வெப்சீரிஸில் முன்கதை: படக்குழு திட்டம்


vadachennai-webseries

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 16:25 pm
  • அ+ அ-

'வட சென்னை' படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என்றும், படத்தின் முன்கதையை வெப் சீரிஸாக எடுக்கவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் படம் 'வட சென்னை'. அக்டோபர் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரூ.45-50 கோடி வரை இந்தப் படத்தின் பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் கதை அடர்த்தி அதிகம் என்பதால், இதை மூன்று பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

மேலும், படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்துக்கு நடுவில், தனுஷ் நாயகனாக நடிக்கும் வேறொரு படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இது ஒரு நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிறது. 'வட சென்னை' படத்தின் முன்கதை, அடுத்த வருடம் ஜூலை மாதம் வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் இருக்கும் இந்த காலம், திரைக்கதாசிரியர்களுக்கு ஒரு பொற்காலம் என்று நினைக்கும் வெற்றிமாறன், "நீங்கள் 2000 பக்கங்கள் கூட ஸ்க்ரிப்ட் எழுதலாம். டால்ஸ்டாய், தஸ்தாவேஸ்கி, டிக்கென்ஸ் மாதிரி எழுதலாம். (அதை படமாக்க முடியும்) இந்த உலகமே கதைகளால் நிரம்பியுள்ளது. இருந்தாலும் இன்னும் புதிய கதைகள் இந்த உலகத்துக்கு தேவைப்படுகிறது" என்று கூறியுள்ளார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close