[X] Close

மீடூ சம்பவங்கள் என் திரையுலக வாழ்வில் இல்லை: குஷ்பு


khushboo-tweets-about-metoo-incident

படம்: குஷ்புவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து....

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 15:46 pm
  • அ+ அ-

மீடூ சம்பவங்கள் என் திரையுலக வாழ்வில் நடந்ததில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு தெரிவித்திருக்கிறார். 

கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இதற்கு பல்வேறு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். 

நடிகைகளில் குஷ்பு மட்டுமே ட்விட்டர் தளத்தை அதிகமாக உபயோகப்படுத்துபவர். அவர் ஏற்கனவே மீடூ பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போது ‘உங்களுடைய சினிமா வாழ்க்கையில் மீடூ சம்பவங்கள்’ என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எனது 40 ஆண்டு கால சினிமா வாழ்வில் எப்போவதாவது மீ டூ என்று சொல்லும் அளவுக்கு சம்பவங்களை சந்தித்துள்ளீர்களா என நிறைய பேர் கேட்கிறார்கள். உண்மையைச் சொன்னால் நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். மன்னிக்கவும். எனக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. 

பெற்றதை திருப்பிக் கொடுக்க பழக்கப்பட்டவள் நான். அதுவும் பலமாக திருப்பிக் கொடுப்பேன். நான் திருப்பிக் கொடுத்தது எல்லாம் மீ டூவுக்காக அல்ல எனக்குச் சேர வேண்டிய பணம் சரியான நேரத்தில் வந்து சேர்வதை உறுதிப்படுத்தவே. ஏனெனில் அப்போது என் வீட்டில் நான் மட்டும்தான் சம்பாதிக்கும் நபராக இருந்தேன்.

அத்துமீறுபவர்களும் அச்சுறுத்துபவர்களும் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள். ஆனால், நாம் ஏன் ஒரு துறையை மட்டும் ஓரங்கட்ட வேண்டும்??

இவ்வாறு குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close