[X] Close

இதுதான் பேசுவதற்கான நேரம்: மீடூ பிரச்சாரத்துக்கு ரகுல் ப்ரீத் சிங் ஆதரவு


rakul-preet-singh-supports-metoo

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 14:57 pm
  • அ+ அ-

இதுதான் பேசுவதற்கான நேரம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து மீடூ பிரச்சாரத்துக்கு ரகுல் ப்ரீத் சிங் ஆதரவு தெரிவித்திருக்கிறார்

கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். 

கடந்த வருடம் ஹாலிவுட்டில் அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அதே பாணியில் தற்போது இந்திய திரையுலகில் உள்ளவர்கள் #Metoo என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசி வருகிறார்கள்.

#Metoo-க்கு பல்வேறு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வெளிவரும் சம்பவங்கள் என்னை நிறையவே பாதிக்கின்றன. இது குறித்து பேசுவதற்கே ஒரு பெருந் துணிச்சல் வேண்டும். வெளியே வந்து துணிச்சலுடன் தங்களுக்கு நேர்ந்த கொடூர அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மீ டூவுக்கு ஆதரவு பெருகட்டும். இறுதியாக தேசமே கேட்கும் ஒரே குரலாக ஒன்றுபட்டிருக்கிறோம். இதுதான் பேசுவதற்கான நேரம். இதுதான் மாற்றத்தைக் கொண்டுவரும் தருணம். இதில் வலிமையான பங்கு வகிக்கும் ஊடகத்துக்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருக்கிறார்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close