[X] Close

3டியில் உயிர் பெறும் ஒரிஜினல் உலகப்போர் காட்சிகள் - விரைவில் வெளியாகிறது


world-war-i-in-3d-colour

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 12:37 pm
  • அ+ அ-

ஜே.ஆர்.ஆர்.டோல்கீன் உலகப் புகழ் பெற்ற புத்தகம்  ’தி ஹாபிட்’(The Hobbit).இதை ’லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ என்ற பெயரில் மூன்று பாகங்களாக இயக்கியவர் பீட்டர் ஜாக்ஸன். இந்த படங்கள் இன்றளவும் கிளாசிக் வரிசைகளில் ஒன்றாக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஃபேண்டசி படங்களின் முன்னோடி என இப்படத்தை சொல்லும் அளவுக்கு செதுக்கியிருப்பார் பீட்டர் ஜாக்ஸன். 

ஆஸ்கார் விருது பெற்ற இவர் தற்போது முதல் உலகப் போர் குறித்த 'They shall not grow old'என்ற ஆவணப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்த படத்துக்காக ப்ரிட்டனில் உள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகத்திலிருந்து  முதல் உலகப் போர் நடந்த போது எடுக்கப்பட்ட காட்சிகளை சேகரித்துள்ளார். சுமார் 100 மணி நேரம் ஓடக் கூடிய அந்த காட்சிகளை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கலரில் மாற்றியுள்ளார் பீட்டர் ஜாக்ஸன். 

மொத்தம் 90 நிமிடம் ஓடக்கூடிய They shall not grow old ஆவணப்படம் விரைவில் தியேட்டர்களில் 3Dயில் வெளியாகவுள்ளது. இந்த மாதம் 16ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள BFI திரைபப்ட விழாவில் திரையிடப்படவுள்ளது. 

பீட்டர் ஜாக்ஸன் 'லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்' தவிர்த்து 'தி ஹாபிட்'( மூன்று பாகங்கள்), 'கிங் காங்' (2005) உள்ளிட்ட பல்வேறு திரைபப்டங்களை இயக்கியுள்ளார்.

மேலும் 'லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்: தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்' படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக கருப்பு வெள்ளையில் இருக்கும் சார்லின் சாப்ளின் படங்களையும் இது போன்ற நவீன தொழில்நுட்பங்களின் மூலம் கலரில் 3டி திரையில் பார்க்க சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close