[X] Close

6 பேக் போட்டோவைப் பார்த்து அஜித்திடமிருந்து வந்த போன்கால்: சூரி நெகிழ்ச்சி


ajith-phone-call-to-soori-regarding-his-six-pack

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 12:35 pm
  • அ+ அ-

6 பேக் போட்டோவைப் பார்த்து அஜித் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் சூரி

ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’. இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு ‘சர்கார்’ படத்துடன் இப்படமும் வெளியாகவுள்ளது.

‘பில்லா பாண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, கருணாஸ், சீமான், தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் சூரி பேசியதாவது:

அனைவருமே ஆர்.கே.சுரேஷை வில்லனாக வந்து நாயகனாகிவிட்டார் என்கிறார்கள். ஆனால், ஆரம்பித்திலிருந்து நான் அவரை ஹீரோவாக தான் பார்த்தேன். முதலிலேயே எதையும் எதிர்பார்க்காமல் சில விஷயங்களை ஓடி ஓடி போய் செஞ்சுக்கிட்டு இருந்தான். ஏன் என்ற கேட்டவுடன், “என்னால் முடிந்ததை செய்தே ஆகவேண்டும்” என்று சொன்னான். அப்போதே என் கண்முன் மிகப்பெரிய உதவி செய்து ஹீரோவாக தெரிந்தார். பின்பு தான் படத்தில் நடித்தார்.

இந்த ‘பில்லா பாண்டி’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவேண்டும். தல - தளபதி இருவரின் வசனங்களை வைத்து கொஞ்சம் உல்டா பண்ணிப் பேசினாலே திரையரங்கில் பயங்கர க்ளாப்ஸ் கிடைக்கும். அப்படியிருக்கும் போது தல ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பார்த்து தெளிவாக இப்படத்தை செய்திருக்கிறார்கள்.

அஜித் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை பலரும் சொல்லியிருக்கிறார்கள். நானும் அவருடன் ‘வேதாளம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறேன். ’சீமராஜா’ படத்துக்காக 6 பேக் வைத்த புகைப்படம் வெளியானவுடன், எதிர்பார்க்காத ஒரு போன் வந்தது. இயக்குநர் சிவா அழைத்தவுடன், சொல்லுங்க சார் என்றேன். ”ஒரு நிமிஷம் அஜித் சார் உங்களிடம் பேசணும்னு சொன்னார்” என்று போனைக் கொடுத்தார். 

“வணக்கம் சார்” என்றவுடன் “வாழ்த்துகள் சூரி. 6 பேக் ஸ்டில் பார்த்தேன். எப்படி இப்படி வைச்சீங்க. எவ்வளவு நாள் மெனக்கிட்டீங்க. சூப்பர். ஒரு கிராமத்திலிருந்து வந்து இவ்வளவு நாள் சினிமாவுக்கு மெனக்கிட்டு, இப்போ ஒரு சின்ன காட்சிக்காக இவ்வளவு மெனக்கிட்டு இருக்கீங்க. வாழ்த்துகள்” என்றார். எனக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது. அவ்வளவு பெரிய இடத்திலிருக்கும் மனிதர் போன் பண்ணி வாழ்த்துச் சொல்றாரே என்று நினைத்தேன். விஷால், ஆர்யா என பலருமே போனில் வாழ்த்தினார்கள். இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்குமே நன்றி. 

இவ்வாறு சூரி பேசினார்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close