[X] Close

விஜய் மகன் தொடர்பான வைரலான இன்ஸ்டாகிராம் பதிவும் விளக்கமும்!


vijay-son-screenshot-about-ajith

  • kamadenu
  • Posted: 12 Oct, 2018 16:37 pm
  • அ+ அ-

சமூகவலைத்தளத்தில் அஜித் - விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் என்றால் பெரும் வைரலாக பரவும். அதுவும் சமீபத்தில் விஜய் மகன் சஞ்சய் குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் வைரலாக பரவியது. 

அதே போல, இன்று (அக்.12) காலை முதலே விஜய்யின் மகன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் என்று பல ஸ்கிரீன் ஷாட்கள் பரவின. இதில் ”விஜய்க்கு பிறகு யாரைப் பிடிக்கும்” என்பதற்கு “அஜித் மற்றும் விஜய்சேதுபதி”, ”யாருடன் நடிக்க விருப்பம்” என்பதற்கு “அப்பா, அஜித் மற்றும் விஜய் சேதுபதி”, ”தல பண்ற ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட்டுள்ளீர்களா” என்பதற்கு “ஒரே ஒரு முறை.. அது வேற லெவல்”, ”தலயைப் பற்றி” என்பதற்கு “கெத்தானவர்” என அதில் பதிலளித்திருக்கிறார்கள்


விஜய் மகன் சஞ்சய் அஜித்தைப் பற்றி மிகவும் பாராட்டி பேசியிருப்பதால், அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வந்தார்கள். இது உண்மையிலேயே விஜய்யின் மகன் தானா என்ற கேள்வியும் பரவியது.

பெரும் வைரலாக இந்தப் பதிவுகள் ஷேர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து “சமீப காலத்தில் விஜய் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும் ,அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.


மேலும் அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது.இதனை யாரும் நம்ப வேண்டாம் .தளபதி விஜயின் மகன் சஞ்சய் ,மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை . தயவு செய்து தளபதி விஜய் ரசிகர்கள் யாரும் இந்த போலி கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் எனவும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காலையிலிருந்து பரவிய பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close