[X] Close

அந்த மாதிரி நபர்களுடன் நான் பணியாற்றமாட்டேன்! - அக்‌ஷய் காட்டம்; விலகினார் சாஜித் கான்


sajid-khan-steps-down-as-director-of-housefull

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Oct, 2018 13:21 pm
  • அ+ அ-

’ஹவுஸ்ஃபுல் 4’ திரைப்படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்ட நடிகர் அக்‌ஷய் குமார் தவறு செய்தவர்களுடன் நான் பணியாற்ற மாட்டேன் என ட்வீட் செய்திருக்கிறார்.

இதனையடுத்து பாலியல் புகாருக்கு உள்ளான ’ஹவுஸ்ஃபுல் 4’ திரைப்படத்தில் இயக்குநர் சாஜித் கான், படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இயக்குநர் சாஜித் கான் மீது ஒரு பத்திரிகையாளர், நடிகை, உதவி இயக்குநர் என மூன்று பேர் பாலியல் புகார் கூறியுள்ளனர். இது பாலிவுட் திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், படத்தின் நாயகனான அக்‌ஷய குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளிநாட்டில் இருந்து திரும்பிய எனக்கு இங்கு நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய சூழலில் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்துமாறு நான் தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். தவறு செய்தவர்களுடன் நான் வேலை செய்ய செய்ய விரும்பவில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" எனப் பதிவிட்டார்.

இத்தகைய சூழலில் இயக்குநர் சாஜித் கான் ’ஹவுஸ்ஃபுல் 4’ படத்துக்கான இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், "என் மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்ட நிலையில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எனது ஹவுஸ்புல் படக் குழுவுக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நான் இயக்குநர் பொறுப்பில் இருந்து தார்மீக பொறுப்பேற்று விலகுகிறேன். உண்மை நிரூபணமாகும் வரை எனக்கு எதிராக அவதூறு பரப்ப வேண்டாம் என ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

’ஹவுஸ்ஃபுல் 4’ படத்தில், நானா படேகரும் இடம் பெற்றிருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close