[X] Close

ஆன்ட்ரியா அண்ணி ;  - டேனியல் பாலாஜி


vadachennai-daniel-balaji

டேனியல் பாலாஜி

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 19:43 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

நடிகர் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் வடசென்னை. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்,கிஷோர், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, பவன் முதலானோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் டேனியல் பாலாஜி பேசியதாவது:

பல வருடங்களுக்கு முன்பே இயக்குநர் வெற்றிமாறன், இந்தப் படத்தின் கதையையும் என்னுடைய கேரக்டரையும் சொல்லியிருந்தார். மிரட்டலான வில்லன் கேரக்டர். நீ அசால்ட்டாகப் பண்ணிருவே என்றார். இருந்தாலும், இதுல வேற ஒரு மிரட்டலைக் கொடுக்கணும்னு சொல்லி உற்சாகப்படுத்திக்கிட்டே இருந்தார்.

வடசென்னை வாழ்வியல்தான் கதை. மனசுல ஒரு துக்கத்தை வைச்சிக்கிட்டு, வெளில சந்தோஷமா இருக்கிற கதாபாத்திரம். உள்ளுக்குள்ளே அழுதுக்கிட்டே இருக்கற கேரக்டர். இதுவொரு நல்ல அனுபவம் எனக்கு.

வடசென்னை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு லொகேஷனுக்குப் போகும் போது ஒவ்வொருவிதமான உணர்வு ஏற்பட்டுச்சு. ஒரு  இடத்துக்கு போகும் போது சந்தோஷமா இருக்கும். இன்னொரு இடத்துக்குப் போனா, அங்கே சட்டுன்னு ஒரு துக்கம் வந்துரும். இப்படி பலவிதமான உணர்வுக்குவியல்களை அனுபவிச்சோம்.

பொல்லாதவன் படத்துல எனக்கொரு அண்ணன் கிடைச்சாரு. இங்கே, ஆன்ட்ரியா அண்ணி கிடைச்சிருக்காங்க. தனுஷ்க்கு நன்றி.

இவ்வாறு டேனியல் பாலாஜி பேசினார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close