[X] Close

'நோட்டா'வுக்கு கலவையான விமர்சனம்: விஜய் தேவரகொண்டா ஒப்புதல் செம வைரல்


vijay-devarakonda-tweet-about-nota-review

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 12:00 pm
  • அ+ அ-

'நோட்டா'வுக்கு கலவையான விமர்சனம் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா வெளியிட்ட அறிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நோட்டா’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. 

விஜய் தேவரகொண்டாவுக்கு 'அர்ஜுன் ரெட்டி', ‘கீத கோவிந்தம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் படம் என்பதால் ‘நோட்டா’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், படமோ எதிர்பார்த்த விமர்சனம் மற்றும் வசூலைப் பெறவில்லை. 

இது தொடர்பாக தாமாக முன்வந்து விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாகவும், அதே வேளையில் வரவேற்பையும் பெற்றுள்ளது. முன்னணி நாயகன் ஒருவர் தனது படத்தின் விமர்சனத்தை ஒப்புக் கொண்டமைக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்து வருகிறார்கள்.

விஜய் தேவரகொண்டா அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனக்காக என் சினிமாவைப் பார்க்கச் செல்பவர்களுக்கு அன்பைத் தெரிவிக்கிறேன். தோற்றுப் போகவேண்டும் என விரும்பியவர்களுக்கு புன்னகையைப் பரிசளிக்கிறேன்.

நான் எந்தவித சாக்குபோக்கும் சொல்ல மாட்டேன். முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். நோட்டாவை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். அது நான் சொல்ல விரும்பிய கதை. அந்தப் பாத்திரத்தை நான் அவ்வளவு மெனக்கிடலுடன் ஆராய்ந்து ஏற்று நடிப்பை வெளிப்படுத்தினேன்.


தமிழகத்துக்கும் படத்தை விரும்பிய அத்தனை தேசிய ஊடகங்களுக்கும் நன்றி. உங்களது அன்பு வந்து சேர்ந்தது. அதேவேளையில் சில ஏமாற்றங்களும், விமர்சனங்களும் கிடைக்கப்பெற்றன. அவற்றை நான் அதீத அக்கறையுடன் அலசி ஆராயவுள்ளேன். எனது தரப்பில் நான் தவறவிட்ட கணக்கை சீர் செய்வேன். இருப்பினும் எனது எண்ணப் போக்கு மாறாது. அதுதான் நான். 

வெற்றியும் தோல்வியும் ஒரு ரவுடியை உருவாக்கவோ உடைக்கவோ போவதில்லை. முன்னேறுவதை நிறுத்தும்போதுதான் நீங்கள் சுயத்தை இழப்பீர்கள். அப்புறம் என்னைப் போன்று ஒரு ரவுடியாக இருப்பதற்கு எதிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. எப்போதும் வெற்றிக்காக போராடுவதில்தான் அந்த ரவுடி இருக்கிறான். உள்ளே எரியும் நெருப்பு அது. அதனால், என்னைப் போன்ற சிந்தனை கொண்டவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துங்கள்.

இதை கொண்டாடுபவர்களுக்கு நான் மீண்டும் வருவேன் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் தேவரகொண்டா தெரிவித்திருக்கிறார்.
 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close