[X] Close

நான் ரூடாப் பேசல; உண்மையப் பேசினேன்! - மனம் திறக்கும் பிக்பாஸ் விஜயலட்சுமி


biggboss2-vijayalakshmi

பிக்பாஸ் விஜயலட்சுமி

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Oct, 2018 12:00 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

நான் ரூடாப் பேசல, உண்மையைப் பேசினேன். அவ்ளோதான் என்கிறார் பிக்பாஸ் விஜயலட்சுமி.

பிக்பாஸ் சீசன் 2ல், வைல்டு கார்டு மூலம் திடீர் எண்ட்ரி ஆனவர் விஜயலட்சுமி. ஆனால் அதேசமயம், தன் முழு ஈடுபாட்டாலும் கடைசிக்கட்ட போட்டிக்களம் வர நெருங்கினார்.

விஜயலட்சுமி, தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

வைல்டு கார்டு மூலம் திடீர்னு உள்ளே வந்ததைத்தான் வெளியேயும் பேசிட்டிருக்காங்க. ஆனா அதேசமயம், இருந்த 40 நாளுக்குள்ளேயே அப்படியொரு எனர்ஜியோட விளையாடி, எல்லார் மனசுலயும் இடம்பிடிச்சிட்டேன்னு சொல்றாங்க. எல்லாருக்கும் நன்றி.

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே இருந்தவங்க கூட, எப்பவுமே இந்த வைல்டு கார்டு மேட்டரைச் சொல்லிட்டிருக்கமாட்டாங்க. அப்பப்போ, ஏதாவது டாஸ்க் வரும்போதுதான் சொல்லுவாங்க. இதே வேற யாராவது வைல்டு கார்டு மூலமா உள்ளே போயிருந்தா, மூலைல முடங்கி அழ ஆரம்பிச்சிருப்பாங்க. நான் கொஞ்சம் இயல்பாவே ஸ்ட்ராங்கானவ. அதனால அதுல என்னால தாக்குப்பிடிக்க முடிஞ்சிச்சு.

இன்னொன்னையும் சொல்லணும். ஒருவேளை பிக்பாஸ் வீட்ல ஆரம்பத்துலயே நான் இருந்திருந்து, வேற யாராவது வைல்டு கார்டுல உள்ளே வந்திருந்தா, நானும் இப்படித்தான் நடந்திருப்பேனோ என்னவோ? ஏன்... இப்படித்தான் நடந்திருப்பேன்.

அப்புறம், என் பேச்சு ஸ்டைல் பாத்துட்டு, ‘நீங்க ரூடாப் பேசுறீங்களே’னு கேட்டாங்க. ‘இல்லீங்க, நான் உண்மையைப் பேசினேன்னு சொன்னேன்.

அதேபோல, அப்படி கோபம் வருதேன்னு கேட்டாங்க. கோபம்னு இல்லீங்க... ஹேப்பியா இருந்தாலும் என் முகம் காட்டிக்கொடுத்துடும். கோபமா இருந்தாலும் என் முகம் காட்டிரும். அழப்போறேன்னாலும் என் மூஞ்சி, பளிச்சுன்னு சொல்லிரும். இந்தக் குணங்களோட கலவைதானே நாம எல்லாருமே. இந்தக் குணங்கள்தான் மனித இயல்பு. நானும் அப்படித்தான்.

இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close