[X] Close

பொய் புகார் சொல்லி மீ டூ பிரச்சாரத்தை தடம் மாற்றி விடாதீர்கள்!- ஹூமா குரேஷி


but-sisters-pls-don-t-make-false-allegations-derail

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Oct, 2018 11:03 am
  • அ+ அ-

பொய் புகார் சொல்லி மீ டூ பிரச்சாரத்தை தடம் மாற்றி விடாதீர்கள் என நடிகை ஹூமா குரேஷி அறிவுரை கூறியுள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் வலுப்பெற்று வருகிறது.  

கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இது நெட்டிசன்களிடையே பெரும் ஆதரவையும், அதே நேரத்தில், அந்தந்த துறையில் பெரும் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. 
இந்நிலையில் இது குறித்து காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹூமா குரேஷி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:

மீ டூ பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்களுக்கு பாராட்டுகள். ஆனால், சகோதரிகளே பொய் புகார் சொல்லி இந்த பிரச்சாரத்தை தடம் மாற்றி விடாதீர்கள். இது மிகவும் முக்கியமான பிரச்சாரம். கேலியாக பேசப்படும் அத்தனையும் சாதாரணமாக சரசமாடும் பேச்சுக்கள் அத்தனையும் அத்துமீறல் ஆகிவிடாது. வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அதனால், நீண்ட காலமாக தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்க காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பை கொடுங்கள். சாதாரண செயல்களை புகாராக்காதீர்கள். உண்மை வெளிவரட்டுமே!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close