[X] Close

வெளியே வந்து திருப்பிக் கொடுங்கள்!- மீ டூ பிரச்சாரத்துக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு


come-out-and-give-it-back

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Oct, 2018 10:49 am
  • அ+ அ-

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.  இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது மீ டூ. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சமூகத்தின் கொடிய நோய். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மீ டூவை ஆரம்பித்துள்ள பெண்களுக்கு இன்னும் சக்தி கிட்டட்டும். உங்களால் இது சாத்தியமாகும். வெளியே வந்து திருப்பிக் கொடுங்கள். உங்கள் எதிர்ப்பு தொடரட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

மீடூ பின்னணி இதுதான்..

கடந்த வருடம் ஹாலிவுட்டில், ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

இதோடு, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தற்போது இந்தியாவிலும் இந்த மீடூ இயக்கம் வலுப்பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இது நெட்டிசன்களிடையே பெரும் ஆதரவையும், அதே நேரத்தில், அந்தந்த துறையில் பெரும் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close