[X] Close

7 மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள்: மனம் உருகிய அஜித்


super-gesture-by-ajith-for-his-fans

அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படம்

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 10:23 am
  • அ+ அ-

அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று இரவு 9 மணி முதல், காலை 5 மணி வரை காத்திருந்து படம் எடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள் 

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. பல முக்கிய காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டது படக்குழு.

இதனால், அடுத்தகட்டமாக படத்தின் டப்பிங் பணிகளை சென்னையில் தொடங்கியிருக்கிறார்கள். முதலில் அஜித் தனது டப்பிங் பணிகளைத் தொடங்கினார். சென்னையிலுள்ள முக்கியமான டப்பிங் திரையிரங்கில் நேற்று (அக்.9) பூஜையுடன் தொடங்கினார்கள்.

அஜித் இங்குதான் டப்பிங் பேசி வருகிறார் என்பதைத் தெரிந்து கொண்டனர் சில ரசிகர்கள். இதனால் டப்பிங் திரையரங்கின் வாசலில் இரவு 9 மணியிலிருந்து காத்திருக்கத் தொடங்கினார்கள். அஜித்தும் டப்பிங் முடித்து வெளியே வருவார் என்று நீண்ட நேரமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

டப்பிங் பணிகள் முடிய தாமதமாகவே இன்று (அக்.10) காலை 5 மணியளவில் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்து கிளம்பியிருக்கிறார் அஜித். அப்போது வெளியே காத்திருந்த ரசிகர்கள் அவருடைய காருக்குப் பின்னால் ஓடியிருக்கிறார்கள். உடனே அதைக் கவனித்து காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் அஜித். காரை பின்னால் எடுங்கள் என்று கூறி ரசிகர்களிடம் வந்து, அவர்களைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது, உங்களுடன் புகைப்படம் எடுக்கவே காத்திருந்தோம் என்று அனைவருமே ஒட்டுமொத்தமாக கூறியிருக்கிறார்கள். “டப்பிங் பேசிவிட்டு வருவதால் ரொம்ப டயர்டா இருக்கு. தனித்தனியாக வேண்டாம். ஒட்டுமொத்தமாக எடுத்துக்கோங்களேன்” என்று அஜித் கேட்க, “அதுவே போதும் சார்” என ரசிகர்கள் சந்தோஷத்தில் மகிழ்ந்திருக்கிறார்கள்.

புகைப்படம் எடுத்துவிட்டு “என்ன பண்ணுகிறீர்கள்...” என்று விசாரித்துவிட்டு ”பத்திரமாக போகணும்” என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார் அஜித்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close