[X] Close

மீடூ கதைகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது! : வரலட்சுமி சரத்குமார் வேதனை


varalakshmi-supports-metoo-campaign

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 19:21 pm
  • அ+ அ-

மீடூ கதைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்திருக்கிறார்

கடந்த வருடம் ஹாலிவுட்டில், ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதோடு, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தற்போது இந்தியாவிலும் இந்த மீடூ இயக்கம் வலுப்பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இது நெட்டிசன்களிடையே பெரும் ஆதரவையும், அதே நேரத்தில், அந்தந்த துறையில் பெரும் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. 

இந்த இயக்கம் குறித்து ட்விட்டரில் வரலட்சுமி சரத்குமார் கூறியிருப்பதாவது:

மீடூ கதைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஆனால் எப்போதும் வெளியே சொல்லாமல் இருப்பதை விட, தாமதமாகச் சொல்வது கூட சிறந்ததுதான். மன உறுதியுடன் வெளிப்படையாக தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வரும் பெண்களுக்கு நன்றி. கடந்த வருடம் நான் மீடூவுக்கு ஆதரவாக நின்றேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் முன்வர வேண்டும் என்று கோருகிறேன்.

நம் உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும். #நேரம்கடந்துவிட்டது.

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்திருக்கிறார்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close