இந்தியாவில் வலுக்கும் #MeToo இயக்கம்: நடிகை சமந்தா ஆதரவு

படம்: கிரண் ஷா
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது. தற்போது நடிகை சமந்தாவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஹாலிவுட்டில், ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதோடு, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
தற்போது இந்தியாவிலும் இந்த மீடூ இயக்கம் வலுப்பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இது நெட்டிசன்களிடையே பெரும் ஆதரவையும், அதே நேரத்தில், அந்தந்த துறையில் பெரும் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.
இந்த இயக்கம் குறித்துப் பேசியுள்ள நடிகை சமந்தா, "மேலும் மேலும் பல பெண்கள் மீடூ இயக்கத்தில் இணையும் வலிமையைப் பெற்று வருகிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது. உங்கள் குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்கள் கோரியும், சந்தேகங்கள் எழுப்பியும் மற்றவர்கள், முக்கியமாக சில பெண்களே பேசுவார்கள் என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஆனால் உங்கள் குரலின் மூலம் பல பெண் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி.
நான் #மீடூஇந்தியா (#MeTooIndia) இயக்கத்தை ஆதரிக்கிறேன்." என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- நயன்தாராவின் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகிறது
- ‘புதுப்பேட்டை 2’ கண்டிப்பாக நடக்கும்: இயக்குநர் செல்வராகவன் நம்பிக்கை
- என் விரலை அசைப்பதுகூட வேதனையாக இருந்த நாளும் உண்டு!- சோனாலி பிந்த்ரே நெகிழ்ச்சிப் பதிவு
- மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி; பிக்பாஸ் வின்னர் ரித்விகா ஸ்டேட்மெண்ட்