[X] Close

நயன்தாராவின் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகிறது


airaa-first-look-released

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 18:43 pm
  • அ+ அ-

நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘ஐரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

இணையத்தில் ‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களின் மூலம் புகழ் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். திரையுலகில் இயக்குநராக ’எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அப்படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை இயக்கினார். இதில் கலையரசன், யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். சென்னை மற்றும் பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னையில் மிகப்பெரிய பேய் பங்களா செட் அமைத்துப் படமாக்கியுள்ளனர். 

‘அறம்’ படத்தைத் தயாரித்த கோட்டபாடி ஜே ராஜேஷ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தலைப்பிடாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தது படக்குழு. தற்போது ‘ஐரா’ என்று பெயரிடப்பட்டு இருப்பதாக அறிவித்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் நயன். இரண்டு வேடங்களில் முதன்முறையாக அவர் நடிக்கும் படம் இது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கிறிஸ்துமஸ் வெளியீடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close