[X] Close

‘புதுப்பேட்டை 2’ கண்டிப்பாக நடக்கும்: இயக்குநர் செல்வராகவன் நம்பிக்கை


selvaraghavan-tweets-about-pudhupettai-2

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 16:18 pm
  • அ+ அ-

‘புதுப்பேட்டை 2’ கண்டிப்பாக நடக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘புதுப்பேட்டை’. தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. யுவன் இசையமைப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், விமர்சனத்துக்கு தகுந்த வசூல் இருந்ததா என்றால் இல்லை.

ஆனால், கேங்க்ஸ்டர் படமென்றாலே தமிழ் திரையுலகில் அனைவருமே ‘புதுப்பேட்டை’ படத்தைத் தான் குறிப்பிடுவார்கள். அவ்வப் போது இப்படம் குறித்து எழும் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் பதிலளித்து வந்தார்.

அவ்வாறு, நடிகர் சந்தீப் கிஷண் “பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் ‘புதுப்பேட்டை’ படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டை ஷேர் செய்ததோடு, நன்றியும் தெரிவித்தார் செல்வராகவன்.

அந்த ட்வீட்டுக்குக் கீழே, ‘மாஸ்டர் பீஸ், ‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்’ என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் செல்வராகவன், “நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close