[X] Close

என் விரலை அசைப்பதுகூட வேதனையாக இருந்த நாளும் உண்டு!- சோனாலி பிந்த்ரே நெகிழ்ச்சிப் பதிவு


sonali-bendre-moving-post-on-instagram

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Oct, 2018 15:35 pm
  • அ+ அ-

ஒரு சில நாட்கள் என் விரலை அசைப்பதுகூட எனக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்திருக்கிறது என தனது போராட்டம் குறித்து நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் சோனாலி பிந்த்ரே.

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு அண்மையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புற்றுநோய் உறுதியான உடனேயே, இந்தப் பயணத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு கடக்கப்போகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அன்று தொடங்கி அவ்வப்போது #OneDayAtATime என்ற ஹேஷ்டேகின் கீழ் சுய உத்வேகத்துக்கான கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் அவர் அண்மையில் பதிந்த பகிர்வில், "கடந்த இரண்டு மாதங்களாக சில நாட்கள் நல்லதாகவும் இருந்திருக்கின்றன. சில நாட்கள் மோசமான நாளாகவும் இருந்திருக்கின்றன. ஒரு சில நாட்கள் எனது விரலை சற்றே உயர்த்துவதும் கூட எனக்கு வேதனை தரும் விஷயமாக இருந்திருக்கிறது. சிரிப்பதுகூட வலியைத் தருவதாக இருந்திருக்கிறது. கீமோதெரபிக்கு பின்னர், அறுவை சிகிச்சைப் பின்னர் சில நாட்கள் மிக மோசமான நாட்களாக இருந்திருக்கின்றன.

உடல் வலியில் ஆரம்பித்து மனதையும் உணர்வுகளையும் ஆட்கொள்ளும் அந்த வலி. சில நேரங்களில் ஒவ்வொரு நிமிடமும் நான் என்னுடனேயே போரிட்டுக் கொள்வதுபோல் இருந்தது. எனக்கே தெரிந்தது நான் மேற்கொண்டிருப்பது தீர்ந்துபோகும் போர் என்பது. இருந்தாலும் அந்த போர் தகுதியானதே. சில மோசமான நாட்களையும் நாம் எதிர்கொள்வது என்பது யதார்த்தமே. எல்லா நேரமும் நாம் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியாது. அப்படி மகிழ்ச்சிக்காக நம்மை கட்டாயப்படுத்துவதால் எந்த பலனும் இல்லை. நடிப்பதால் யாருக்கு என்ன லாபம்.

அதனாலேயே நான் நிறைய முறை அழுதிருக்கிறேன். சுய பட்சாதபம் கொண்டிருக்கிறேன். ஆனால், இவையெல்லாம் வெகு சிறு நேரம் மட்டுமே. உணர்வுகள் தவறல்ல. சில நேரங்களில் எதிர்மறை எண்ணகளை உணர்வதும்கூட தவறில்லை. ஆனால், அதற்கு என்று ஒரு நேரம் கால அளவு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத்தாண்டி அதையே அசைபோட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அந்த எதிர்மறை உணர்வுகள் உங்களை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் இருந்து வெளிவருவதற்கு உங்கள் மீது நீங்கள் அதீத அக்கறை கொண்டிருக்க வேண்டும். தூக்கம் எப்போதுமே சிறந்த நிவாரணி. இல்லையேல் எனக்கு விருப்பமான ஸ்மூத்தியை அருந்துவேன். அதுவும் இல்லாவிட்டால் என் மகனுடன் உரையாடுவே.

எனது சிகிச்சை தொடர்கிறது. இப்போதைக்கு எனது இலக்கு எல்லாம் உடல் நலம் தேறி வீடு செல்ல வேண்டும் என்பது மட்டுமே"
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார். அத்துடன் கண்ணுக்கு காஜல் போடும் புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close