[X] Close

மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி; பிக்பாஸ் வின்னர் ரித்விகா ஸ்டேட்மெண்ட்


rythvika-biggboss2

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Oct, 2018 14:41 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மக்களின் மனங்களில், மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோருக்கு தனியிடம் இருப்பதாகவே உணருகிறேன் என பிக்பாஸ் வின்னர் ரித்விகா, தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2ல் வின்னரானார் ரித்விகா. இதையடுத்து, தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

முதலில், பிக்பாஸ் சீசன் 2ல் என்னை வின்னராகத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. எனக்காக, என் மீது அன்பு கொண்டு எத்தனையோ பேர் வாக்களித்து, வெற்றி பெறச் செய்திருப்பதை என்னால் மறக்கவே முடியாது.

பிக்பாஸ் சீசன் 2ல் நான் வின்னராக இருந்த போதிலும், மக்களின் மனங்களில் தனியிடம் பிடித்தவர்களையும் சொல்லியாகவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் இயல்புடன் இருந்தார்கள். அதனால்தான் மக்கள் தங்களின் மனதில் அப்படியொரு இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

முதலில் மும்தாஜ் மேடம். அப்படியொரு அன்பு மனுஷி. அதேபோல யாஷிகாவுக்கு நல்ல இடம் கொடுத்து கொண்டாடிட்டிருக்காங்க. அடுத்து, ஜனனி மேலயும் ஐஸ்வர்யா மேலயும் செம ஈர்ப்பு இருக்கு மக்களுக்கு!

எங்கே போனாலும் ஐஸ்வர்யா மேல ஒரு க்ரேஸ் இருப்பதை எல்லாராலயும் உணரமுடியும். மும்தாஜ் மேடத்து மேல ஒரு மரியாதை, ஒரு அன்பு, ஒரு பிரியம் எல்லாருக்கும் இருக்கு என்று ரித்விகா தெரிவித்தார்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close