[X] Close

’செக்கச்சிவந்த வானம்’ கொரிய படத்தின் காப்பியா? - கதாசிரியர் விளக்கம்


ccv-copied

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 13:50 pm
  • அ+ அ-

’செக்கச்சிவந்த வானம்’ திரைப்படம், கொரிய திரைப்படமான நியூ வேர்ல்டின் நகல் என்ற குற்றச்சாட்டுக்கு, படத்தின் இணை கதாசிரியர் சிவா ஆனந்த் பதிலளித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த்சுவாமி, அருண் விஜய், சிலம்பரசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியான ’செக்கச்சிவந்த வானம்’, ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் படம் வெளியான சில நாட்களில் இது ’நியூ வேர்ல்ட்’ என்கின்ற கொரிய திரைப்படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இன்னொரு தரப்பு, இந்தப் படம் ’பொன்னியன் செல்வன்’ கதையின் தழுவல் என்றும் கூறிவந்தது. 


மணிரத்தினத்துடன் சிவா ஆனந்த்

படத்தில் ஜோதிகாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த சிவா ஆனந்த்தான் படத்தின் இணை கதாசிரியர், வசனகர்த்தாவும் கூட. இவர் மணிரத்னத்துடன் பல வருடங்களாக இணைந்து பணியாற்றிவருகிறார். ’செக்கச் சிவந்த வான’த்தின் அடிப்படைக் கதையும் இவருடையதே. இவரிடம் கொரிய படம் பற்றியும், ’பொன்னியன் செல்வன்’ பற்றியும் கேட்டபோது, சிரித்துக் கொண்டே பதிலளித்தார். 

"நான் இன்னும் அந்த கொரிய படத்தைக் கூட பார்க்கவில்லை. பொன்னியன் செல்வன், ஒருவருக்கொருவர் அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் இரண்டு சகோதரர்களைப் பற்றியக் கதை. செக்கச்சிவந்த வானத்தில் மூன்று சகோதரர்கள் தங்களுக்கு சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஏன் இரண்டையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று சிவ ஆனந்த் கூறியுள்ளார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close