[X] Close

வாவ் விஜய்சேதுபதி, த்ரிஷா: ராதிகா மகிழ்ச்சி


radhika-tweets-about-96-movie

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 20:38 pm
  • அ+ அ-

புது யுக நடிகர்களை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

'96' தொடர்பாக பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்தப் படம் தொடர்பாக ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நல்ல சுவாரஸ்யமான திரைப்படங்களுக்கு என்ன ஒரு சிறந்த நேரம். இந்தக் காலத்தில், புது பாதைகளை அமைக்கும் பெண்களை, எளிதில் யூகிக்கக் கூடிய விஷயங்களை செய்ய மறுக்கும் புது யுக நடிகர்களை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்களின் புத்திசாலித்தனத்தை மதிக்கும் அற்புதமான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என் வணக்கங்கள். 

96 என்ற இனிமையான படத்தைப் பார்த்தேன். ரசிகர்களின் கைகளைப் பிடித்து இந்த மனித உணர்ச்சிகளின் ஊடே நடக்கவைத்த இயக்குநருக்கு பாராட்டுகள். வாவ் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா. அற்புதமான, அழகான நடிப்பு.

இவ்வாறு ராதிகா தெரிவித்திருக்கிறார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close