[X] Close

திரையுலகில் பலருக்கும் உந்துசக்தியாக இருக்கிறீர்கள் விஜய்சேதுபதி: குஷ்பு புகழாரம்


kushboo-tweet-about-96-movie

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 20:30 pm
  • அ+ அ-

திரையுலகில் பலருக்கும் உந்துசக்தியாக விஜய்சேதுபதி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு புகழாரம் சூட்டியிருக்கிறார்

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

'96' தொடர்பாக பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இப்படம் தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பிரேம்குமார், அற்புதமான, அன்பான ஒரு படத்தைத் தந்ததற்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். ஒவ்வொரு ரசிகரின் இதயத்திலும் சரியான இசையை மீட்டியிருந்தீர்கள். எங்கள் பள்ளிக் காலத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றதற்கு நன்றி. 

விஜய் சேதுபதி, உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. உங்கள் உண்மையான ரசிகையாக ஒவ்வொரு படத்திலும் என்னை மாற்றுகிறீர்கள். 96 உண்மையில் அட்டகாசமான படம். ஒவ்வொரு ஃபிரேமும் பல விஷயங்கள் பேசுகிறது. நீங்கள் செய்யும் அற்புதப் பணியைத் தொடருங்கள். இங்கு பலருக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறீர்கள். எனக்கும்தான். ஒட்டுமொத்தக் குழுவுக்கும் பாராட்டுகள். 

த்ரிஷா, இந்த வருடம் ஒவ்வொரு விருதையும் வென்று விட வேண்டும் என்று நினைத்திருக்கிறாயா? 96 பார்த்தேன். மிகச்சிறந்த நடிப்பு. அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறாய். படத்தில் உன்னை மிகவும் பிடித்திருந்தது. அவ்வளவு அழகாக இருந்தாய். லவ் யூ பேபி.  

இவ்வாறு குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close