[X] Close

'96' ஜானு கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி: த்ரிஷா நெகிழ்ச்சி


trisha-tweet-about-96-success

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 20:04 pm
  • அ+ அ-

'96' படத்தில் ஜானு கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தின் த்ரிஷாவின் நடிப்புக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை சமூகவலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா.

’96’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அற்புதமான பின்னூட்டங்களுக்கு நன்றி. அன்பான வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. '96' படத்தில் ஜானு கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தப் படம் ஒரு அணியின் உழைப்பு. காதலின் பெயரால் நாங்கள் உணர்ந்த சின்ன சின்ன மாயத்தை எல்லாம் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் சேர்த்திருக்கிறோம்.

இவ்வாறு த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close