[X] Close

எனக்கு நிச்சயமாகவில்லை, திருமணமும் இல்லை: வரலட்சுமி சரத்குமார்


varalakshmi-tweet-about-marriage

படம்: கிரண் ஷா

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 19:53 pm
  • அ+ அ-

எனக்கு நிச்சயமாகவில்லை, திருமணமும் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

விஷால் - வரலட்சுமி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். "லெட்சுமிகரமான பெண்ணுடன் தான் திருமணம் நடைபெறும்" என்று பல பேட்டிகளில் விஷால் தெரிவித்திருக்கிறார். இதனால் இருவரும் திருமணம் செய்ய கொள்ளப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியானது. 

சில காலங்களுக்கு முன்பு, தனது ட்வீட்டின் மூலம் காதல் முறிவை உறுதிப்படுத்தினார் வரலட்சுமி. ஆனால், தற்போது விஷாலுடன் மீண்டும் வரலட்சுமி சேர்ந்துவிட்டார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'சண்டக்கோழி 2' படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வரலட்சுமிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை தனது ட்விட்டர் பதிவில் மறுத்திக்கிறார் வரலட்சுமி. 

திருமண வதந்தி தொடர்பாக “நான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன. எனக்கு நிச்சயமாகவில்லை, திருமணமும் இல்லை. அடிப்படை ஆதாரம் இல்லாத இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி, என்னைச் சிறுமைப்படுத்த நினைக்கும் வேலையில்லாதவர்களுக்கு நன்றி. நான் இங்கு வேலை செய்ய, நடிக்க வந்திருக்கிறேன். என் கடின உழைப்பு என்றும் தோற்காது. நான் என் வேலையை விரும்புகிறேன். நீங்கள் நினைத்தது நடக்காது” என்று வரலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close