[X] Close

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி: காதலை உறுதிப்படுத்திய ‘பிக் பாஸ்’ வைஷ்ணவி


vaishnavi-insta-post-about-his-lover

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 19:36 pm
  • அ+ அ-

புகைப்படங்கள் குறித்து பரவிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தன் காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் வைஷ்ணவி.

பிக் பாஸ் 2-வில் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. அந்தப் போட்டியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனை முன்வைத்து பலரும் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.

இது தொடர்பாக வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

தெரியாதவர்கள், சரியாகத் தெரியாதவர்கள், சந்தேகம் இருப்பவர்கள் என எல்லோருக்கும் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் அஞ்சன். எனது பாய்ஃபிரெண்ட். இவர் ஒரு பைலட். நாங்கள் இரண்டரை வருடங்களாக காதலித்து வருகிறோம். நான் அவரை விரும்புகிறேன். 

எங்கள் புகைப்படங்கள் ஏன் இணையத்தில் இருக்கிறது என்பது குறித்த உங்களது யூகங்களுக்கு ஓய்வுகொடுங்கள். மேலும், நாங்கள் நிறைய இலக்குகள் வைத்திருக்கும் தம்பதி. இந்தப் பதிவை என் காதலருக்கு அர்ப்பணம் செய்கிறேன். 

மீண்டும் நீ பல்வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டாய். நான் இன்னும் 2 மாதங்கள் உன்னைப் பிரிந்து இருக்க வேண்டும். நான் 2 மாதங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த பிறகும் நமது காதல் உயிர்ப்போடு இருப்பதால், இந்த 2 மாதங்கள் எளிதில் கடந்துவிடும். பிரச்சினையில்லை. லவ் யூ. உன் முட்டாள் முகத்தை காண வேண்டும். சீக்கிரம் சென்னைக்கு வா. அப்போதுதான் ஸ்னாப்சாட் பயன்படுத்தி இன்னும் பல கோமாளித்தனமான புகைப்படங்களை எடுத்துக் கொள்ளமுடியும் 

இவ்வாறு தனது காதலன் புகைப்படத்தை வெளியிட்டு தகவல்களையும் பரிமாறிக்கொண்டிருக்கிறார் வைஷ்ணவி.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close