[X] Close

சில கறுப்பு ஆடுகளால் ஒட்டுமொத்த திரையுலகின் பெயருமே கெடுகிறது: சமந்தா வேதனை


samantha-speech-at-madurai

படம்: கிரண்ஷா

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 19:18 pm
  • அ+ அ-

ஒரு சில கறுப்பு ஆடுகளால் ஒட்டுமொத்த திரையுலகின் பெயருமே கெடுகிறது என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சமந்தா தெரிவித்தார்.

மதுரையில் செல்போன் கடை ஒன்றின் திறப்புவிழாவில் கலந்து கொண்டார் சமந்தா. அவரைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு சில மணித்துளிகள் போக்குவரத்து பாதித்தன.

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் சமந்தா பேசியதாவது:

ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை. சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு அவர்களே முக்கியமான காரணம். நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன். அவர்களுக்கு என் வாழ்த்துகள். 

சினிமாதான் எனக்கு அனைத்துமே கொடுத்திருக்கிறது.இந்த சினிமா உலகத்தை கடவுள் மாதிரி மதிக்கிறேன். ஒரு நடிகரைத் தான் திருமணம் செய்திருக்கிறேன். அதைப் பற்றி குறைச் சொல்லவே மாட்டேன். எனக்கு பாலியல் தொந்தரவு நிகழ்ந்ததில்லை. இதுவரை என் திரையுலகில் நல்ல இயக்குநர்கள், நடிகர்களுடனே பணிபுரிந்திருக்கிறேன். அதனால்தான் மறுபடியும் மறுபடியும் அவர்களுடனே என் பயணம் இருக்கிறது. 


அனைத்து திரையுலகிலுமே ஒரு சில கறுப்பு ஆடுகள் இருக்கும். அவர்களால்தான் ஒட்டுமொத்த திரையுலகின் பெயருமே கெடுகிறது. ஒருவருக்கு நடப்பதால், அனைவருக்குமே நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது. 

திருமணத்திற்குப் பிறகு என் நடிப்பில் 5 படங்கள் வெளியாகின்றன. இன்னும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன். ஒவ்வொரு நடிகருக்குமே சேலஞ்சான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமிருக்கும். அதனால்தான் படங்களைக் குறைத்துக்கொண்டேன். . நல்ல கதைகளுக்காகக் காத்திருக்கிறேன். 

இவ்வாறு சமந்தா பேசினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close