[X] Close

'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: இந்தியளவில் ட்ரெண்ட்டாகும் #SuperDeluxe #FahadhFaasil #ThiagarajanKumararaja


super-deluxe-first-look-released

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 18:26 pm
  • அ+ அ-

’சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து, அப்படம் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் இந்தியளவில் ட்ரெண்ட்டானது.

'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட வருடங்கள் கழித்து தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

'அநீதி கதைகள்' என முதலில் பெயரிடப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பாக தான் ‘சூப்பர் டீலக்ஸ்’ என மாற்றினார்கள். ஷில்பா என்ற திருநங்கையாக இப்படத்தில் நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. இவரது லுக்கை தியாகராஜன் குமாரராஜா வெளியிட்ட போது, பலரும் பாராட்ட எதிர்பார்ப்பு அதிகமானது.

இன்று (அக்.8) ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்பதால், பலரும் இதனை பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதனால் #SuperDeluxe #FahadhFaasil #ThiagarajanKumararaja ஆகிய மூன்று ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்ட்டானது. இந்தியளவில் முதல் இடத்தில் #SuperDeluxe என்பது ட்ரெண்ட்டாகி வருவதே, இப்படத்திற்கான எதிர்பார்ப்பை காட்டுகிறது.

இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் ஃபஹத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த்துள்ளார்.

தியாகராஜன் குமாரசாமி, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர் ஆகிய நான்கு பேரும் இணைந்து இப்படத்துக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close