[X] Close

கேப்டன் அமெரிக்கா பயணம் முடிந்தது: நடிகரின் நெகிழ்ச்சிப் பதிவு


chris-evans-last-day-post

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 08 Oct, 2018 18:17 pm
  • அ+ அ-

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கிறிஸ் ஈவன்ஸ் பகிர்ந்துள்ள பதிவு ஒன்றைப் படித்து பல ரசிகர்கள் கண்ணீர் சிந்திவருகின்றனர்.

மார்வல் காமிக்ஸின் பிரபல கதாபாத்திரங்களில் ஒன்று கேப்டன் அமெரிக்கா. இதுவரை மூன்று கேப்டன் அமெரிக்கா படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. அவெஞ்சர்ஸ் படங்களிலும், கேப்டன் அமெரிக்கா ஒரு முக்கியமான கதாபாத்திரம். இதுவரை 3 அவெஞ்சர்ஸ் பாகங்கள் வெளியாகியுள்ளன. அவெஞ்சர்ஸின் இறுதி பாகம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகியுள்ளது. 

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த கிறிஸ் ஈவன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், படப்பிடிப்பின் இறுதி நாளில், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில், "அவெஞ்சர்ஸ் 4 படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக முடித்துவிட்டேன். இது மிகவும் உணர்ச்சிகர்மான நாள். கடந்த 8 வருடங்களாக இந்த கதாபாத்திரத்தில் நடித்தது, எனக்குக் கிடைத்த கௌரவம். கேமராவுக்கு முன்னால், பின்னால் இருந்த அனைவருக்கும், ரசிகர்களுக்கும் - நல்ல நினைவுகளுக்கு நன்றி. எப்போதும் கடன்பட்டிருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1.4 மில்லியன் ரசிகர்கள் இந்தப் பதிவை விரும்பியுள்ளனர். 3.5 லட்சம் முறை இது ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. ஈவன்ஸின் இந்த பதிவுக்குக் கீழ், பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பலர் இதை நம்பமுடியவில்லை என கண்ணீர் சிந்தும் பதிவுகளாகப் பகிர்ந்து வருகின்றனர். 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close