[X] Close

'2.0' இசைக் கோர்ப்பு பணியின் போது ரஹ்மானுக்கு கிடைத்த புத்துணர்ச்சி!


incident-during-2point0-music

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 12:30 pm
  • அ+ அ-

லண்டனில் '2.0' இசைக்கோர்ப்புப் பணிகளுக்கு இடையே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கின்றன. 

தற்போது இந்தப் படத்துக்காக பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றனர். இதன் பணிகள் முடிவுற்றதாக தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ‘2.0’ இசைக்கோர்ப்புப் பணியின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல பாடகர் அத்னான் சமி “செல்போன்களிலும், ஐபேட்களிலும் பாஸ்வேர்ட் போட்டு வைத்துக் கொள்ளும் காலம் இது. 


என்னுடைய செல்ல மகள் மெதினா என்னுடைய போனை எடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ’ஃபேஸ்டைம்’ எனப்படும் வீடியோ கால் செய்து அவரோடு அழகாக உரையாடியிருக்கிறார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் '2.0' படத்துக்கான பின்னணி இசைக்கான பணியில் இருந்தார். தனது ஸ்டூடியோவையும் எனது மகளுக்குக் காண்பித்திருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

அத்னான் சமியின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான், “அன்புள்ள அத்னான்.. என்னுடைய மோசமான மனநிலையை மெதினாவின் ஃபேஸ்டைம் சரி செய்து விட்டது. நன்றி மெதினா. இறைவன் அவருக்கு அருள்புரியட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close