[X] Close

'ஆட்டோகிராப்' - '96' - சம்பந்தப்படுத்தாதீங்க! : இயக்குநர் சேரன்


cheran-tweets-about-96-movie

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 10:20 am
  • அ+ அ-

'ஆட்டோகிராப்'பையும் '96'யும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்தப் படம் 'ஆட்டோகிராப்' பாணியில் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். நேற்று ‘96’ படத்தைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் சேரன். 

இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்சினிமாவின் மிகமுக்கியமான படம் '96'. ஆட்டோகிராப்பையும் '96'ஐயும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள். இயக்குநர் பிரேம்குமாருக்கு வாழ்த்துகள்.

விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவு செய்து இந்த வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாகக் கோர்த்த இயக்குனர் மிகச் சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோன்ற சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும்.

இவ்வாறு சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close