[X] Close

விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க கருணாகரன் முடிவு?


complaint-against-vijay-fans-by-karunakaran

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 22:27 pm
  • அ+ அ-

ட்விட்டர் கணக்கில் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக திட்டி வருவதால், நடிகர் கருணாகரன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார்.

'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். அந்த சமயத்தில் நடிகர் கருணாகரனும் தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களை முன்வைத்து விஜய்யை சீண்டி ட்வீட் செய்தார். இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

அன்று முதலே, விஜய் ரசிகர்கள் தினமும் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு திட்டி வருகிறார்கள். அவ்வப் போது அதற்கு தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறார் கருணாகரன். விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்றையும் உருவாக்கி அதிலும் திட்டி தீர்த்தார்கள்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் திட்டுவது நிறுத்தாமல் தொடரவே, அவர்கள் மீது புகார் அளிக்க கருணாகரன் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக நாளை (அக்.8) கமிஷ்னர் அலுவலகத்திற்கு கருணாகரன் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால், கருணாகரன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close