[X] Close

நல்லதுக்காக வீதில கூட நிப்பேன் – விஷால் ; கமல், ரஜினி, விஜய், இப்போ விஷால்?


vishal-naam-oruvar

நடிகர் விஷால் - நாம் ஒருவர்

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Oct, 2018 22:26 pm
  • அ+ அ-

விஷால், சினிமாலேருந்து டிவிக்கு வந்து நிக்கிறானேன்னு பாக்கறீங்களா? நல்லது சிலபேருக்கு நடக்கும்னா, இந்த விஷால் வீதில இறங்கி வந்து நிப்பான் என்று நாம் ஒருவர் நிகழ்ச்சியில் விஷால் பேசினார்.

நாம் ஒருவர் எனும் தனியார் டிவியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஷால். இன்று ஞாயிற்றுக்கிழமை 7ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஷால் பேசியதுதான், செம டாபிக். நிகழ்ச்சியில், விஷால் பேசியது இதுதான்:

என்னடா இந்த விஷால், சினிமாலேருந்து டிவிக்கு வந்துட்டானேன்னு பாக்கறீங்களா? நல்லது நடக்கணும்னா, இந்த விஷால் வீதிக்கு வந்தும் நிப்பான். கார்ல போகலாம்னா, டோல் ரேட்டெல்லாம் ஏத்திட்டாங்க. சரி, டூவீலர்ல  போகலாம்னா பெட்ரோல் விலையை ஏத்திட்டாங்க. வேற வழி… பஸ்ல போகலாம்னு போனா, பஸ் டிக்கெட் ரேட்டை ஏத்திட்டாங்க.

என்னடா இது… சரி, நடந்தே போகலாம்னு போனா… வழியெல்லாம் ஏகப்பட்ட பள்ளம், குழிகள். இதெல்லாம் பாத்தா, இதெல்லாம் மாறணும்னு தோணும்தானே. அப்படி மாறுறதுக்கு, முதல்ல நீங்க மாறணும். நான் மாறணும். மாறுவோம்.

இவ்வாறு விஷால் பேசினார்.

 முதல் நிகழ்ச்சியின் முதல் பேச்சிலேயே அரசியல் திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறார் விஷால். இனி, நாம் ஒருவர் நிகழ்ச்சியில் அவ்வப்போது, இப்படியான சரவெடிகள், வந்துகொண்டே இருக்குமோ என்னவோ?

கமல், ரஜினி, விஜய், இப்போது விஷால்?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close