[X] Close

சப்போர்ட்டுக்கு நன்றி: 'பிக் பாஸ் 2' வெற்றியாளர் ரித்விகா வீடியோவில் உருக்கம்


riythivika-video-statement-after-bigg-boss-victory

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 22:06 pm
  • அ+ அ-

சப்போர்ட்டுக்கு நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக தெரிவித்திருக்கிறார் 'பிக் பாஸ் 2' வெற்றியாளர் ரித்விகா

பிக் பாஸ் சீசன் 2-வின் இறுதிப் போட்டியில் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரித்விகா வெற்றி பெற்றதாக கமல் அறிவித்தார்.

தனது வெற்றிப் பேச்சில், “பொறுமையோடயும் நிதானத்தோடயும் விளையாடினா, எப்ப வேணா, யார் வேணா ஜெயிக்கமுடியும். இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டார் ரித்விகா. அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் தனது ட்விட்டர் பக்கத்திலும் நன்றி தெரிவித்திருந்தார்.

100 நாட்கள் தொடர்ச்சியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியுலகமே தெரியாமல் இருந்ததால், வீட்டில் ஒய்வெடுத்து வந்தார் ரித்விகா. தற்போது சகஜ நிலைக்கு திரும்பி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ரித்விகா பேசியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். நான் ரித்விகா பேசுறேன். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, நிறையப் பேர் நிறைய சப்போர்ட் பண்ணியிருக்கீங்க. இது வெளியே வந்தவுடன் தான் எனக்கு தெரிந்தது. ரித்விகா பேன்ஸ், ரித்விகா ஆர்மி, ரித்விகா வாரியர் என நிறைய தொடங்கி எனக்கு சப்போர்ட் பண்ணி வாக்களித்திருக்கிறீர்கள். 


இந்த ஒரு வாரம் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டேன். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. விரைவில் ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் லைவ்வில் வந்து பேசுகிறேன், தொடர்ச்சியாக சப்போர்ட் பண்ணுங்கள்

இவ்வாறு அந்த வீடியோ பதிவில் ரித்விகா பேசியிருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close