[X] Close

'96' படம் திருட்டுத்தனமாக பதிவு: விஷால் உடனடி நடவடிக்கை


vishal-action-regarding-96-movie-piracy

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 21:51 pm
  • அ+ அ-

'96' படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்த இளைஞர்களை பிடித்து, உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் விஷால்

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்த வாரம் வெளியான படங்களில் ‘96’ படத்திற்கு தான் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் அனைத்துமே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இருந்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று (அக்.7) காலை ‘96’ படத்தை சென்னையிலுள்ள உதயம் திரையரங்கில் விக்னேஷ், வசந்த் என்ற இரண்டு  இளைஞர்கள் செல்போனில்  திருட்டுத்தனமாக  படம் எடுக்க முயற்சித்து இருக்கிறார்கள்.

இந்த தகவல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு தெரிந்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறார்கள். படத்தை திருட்டுத்தனமாக பதிவிட்ட இருவரையும் பிடித்து, அவர்கள் உபயோகித்த செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும். ஆர்.6 காவல் நிலையத்தில் இரண்டு இளைஞர்களையும் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இச்செயலுக்கு உறுதுணையாக இருந்த பிரவின் காந்தி, ராஜா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close