[X] Close

ஜெயா டிவியில் வரலெட்சுமி தொகுத்து வழங்கும் ‘உன்னை அறிந்தால்’ நிகழ்ச்சி: டீஸர் வெளியீடு


unnai-arinthaal-new-show-by-varalakshmi

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 20:32 pm
  • அ+ அ-

ஜெயா டிவியில் வரலெட்சுமி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சிக்கு  ‘உன்னை அறிந்தால்’ எனப் பெயரிட்டு டீஸரை வெளியிட்டு இருக்கிறார்கள் 

தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் எல்லாம் திரையுலகில் கால்பதித்த காலம் போய், இப்போது திரையுலகினர் தொலைக்காட்சியில் கால்பதிக்கும் காலம் வந்துவிட்டது. தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மாறியுள்ளனர்.

சன் டிவியில் 'நாம் ஒருவர்' என்ற நிகழ்ச்சியின் மூலம் விஷால், சன் லைஃப் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியின் மூலம் பிரசன்னா என பலரும் வந்திருக்கிறார்கள். இதில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வரலெட்சுமி சரத்குமார்.

அக்டோபர் 14-ம் தேதி முதல் ஜெயா தொலைக்காட்சியில் ’உன்னை அறிந்தால்’ என்ற பெயருடைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் வரலெட்சுமி சரத்குமார். சமூகம் சார்ந்த நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள ப்ரோமோவில் “சமூக மாற்றத்துக்கான ஒரு மேடை. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருக்கிறதே ஒரு வன்முறை. சரியான நேரத்தில், சரியான இடத்தில் பேசுவது தான் சமூக மாற்றத்துக்கான வழிமுறை. சில தப்புகளை எதிர்த்தே ஆகணும்னு உள்ளுக்குள்ளே ஒரு குரல் கேட்கும். அதை இங்கு வந்து பேசினால் இந்த உலகத்துக்கே கேட்கும். வாங்க... சேர்ந்து பேசலாம். இந்த சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம்” என்று வரலெட்சுமி பேசியுள்ளார்.


தொடர்ச்சியாக தனது ஷக்தி அமைப்பில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் வரலெட்சுமி. இந்த நிகழ்ச்சியின் மூலம், மேலும் சில விஷயங்களை முன்னெடுப்பார் எனத் தெரிகிறது.

வரலெட்சுமியின் தொலைக்காட்சி விஜயத்திற்கு அவரது நண்பர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close