[X] Close

அழவே மாட்டேன்; ஆனா அழுதுட்டேன்! - ’96’ படம் குறித்து ’பக்ஸ்’ பெருமாள்


baks-perumal-speech-at-96-success-meet

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 19:58 pm
  • அ+ அ-

அழவே மாட்டேன். ஆனால் ‘96’ படம் பார்த்து அழுதுவிட்டேன் என்று ‘பக்ஸ்’ பெருமாள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் 

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘96’ படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இதில் விஜய்சேதுபதி, இயக்குநர் ப்ரேம்குமார், சின்மயி, தேவதர்ஷினி, பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியுடன் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இருப்பதால் த்ரிஷா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இவ்விழாவில் '96' படத்தில் நடித்திருக்கும் ’பக்ஸ்’ பெருமாள் பேசியதாவது:

என்னுடைய நண்பர் ப்ரேம்குமார், நல்ல திறமைசாலி என்றெல்லாம் தெரியும். அவருடனேயே தான் இத்தனை வருடமாக இருக்கிறேன். ப்ரேம்குமாரைப் பொருத்தவரை, அவர் பிரமாதமான ஒளிப்பதிவாளர். கேமிரா வழியே பார்க்கும்போதே, கேரக்டர்கள் செய்யும் நடிப்பை, எக்ஸ்பிரஷனை உள்வாங்கிக் கொள்வான்.

ப்ரேமின் இன்னொரு திறமை எழுத்து. இந்த படத்தில் ஒரு காட்சியில், ‘கடன் தொல்லை அதிகமாயிருச்சு. அதான் வீட்டை காலி பண்ணிட்டு, ஊரை காலி பண்ணிட்டுப் போயிட்டாங்கன்னு ஒரு வசனம் வரும். இந்த காட்சியை வைச்சிக்கிட்டு, நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே சிறுகதையே எழுதிருக்கார் ப்ரேம்குமார். 

இந்தப் படம் எடுக்கறதுக்கு முன்னாடியே கதை நல்லாவே தெரியும். ஆனா, படமா எடுத்துட்டிருக்கும் போதும் சரி, எடுத்து முடிச்ச பிறகு பாத்தப்பவும் சரி... அழுதுட்டேன். பொதுவா அழமாட்டேன் நான். அழுகை வராது எனக்கு. ஆனா என்னால நிறைய சீன்கள்ல என்னால அழுகையை அடக்கமுடியல. விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்காங்க. இந்தப் படத்தைக் கொண்டாடுகிற ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு ’பக்ஸ்’ பெருமாள் பேசினார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close