[X] Close

'96' கதை கேட்டப்பவே தூக்கம் போச்சு! - நடிகை தேவதர்ஷினி நெகிழ்ச்சி


devadharshini-speech-at-96-success-meet

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 19:52 pm
  • அ+ அ-

'96' கதையைக் கேட்ட போதே தன் தூக்கம் போய்விட்டதாக நடிகை தேவதர்ஷினி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘96’ படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இதில் விஜய்சேதுபதி, இயக்குநர் ப்ரேம்குமார், சின்மயி, தேவதர்ஷினி, பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியுடன் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இருப்பதால் த்ரிஷா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இவ்விழாவில் '96' படத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி பேசியதாவது:

இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டு, இயக்குநர் ப்ரேம்குமார் பேசினார். பிறகு அவர் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். மறுநாள் என் மகளுக்கு பரிட்சை. அவளுக்குப் பாடமெல்லாம் சொல்லித்தரவேண்டியிருந்தது. அவளும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். ஏழரை மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்தார். 9,30 மணி வரைக்கும் சொல்லிவிட்டு, இதுதான் இடைவேளை என்றார். என்னால் கதையைக் கேட்டுவிட்டு நிதானத்துக்கு வரவே முடியவில்லை. தவித்துப் போனேன்.

மகளோ கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள். ‘ஏன் சார், இடைவேளைக்கு அப்புறம் என்னாகுதுன்னு கேட்டேன். அதுக்குப் பிறகு என்னாகுதுன்னு எனக்குத் தெரிஞ்சுக்கலேன்னா, தூக்கமே வராதுன்னு இருந்துச்சு. கதையை மொத்தத்தையும் சொன்னார். என் தூக்கமே போச்சு. அவ்வளவு உணர்வுபூர்வமான கதை பண்ணிருக்கார் இயக்குநர். விஜய்சேதுபதியோட நடிப்பு அமர்க்களம். த்ரிஷாவுக்கு இது லைஃப் டைம் கேரக்டர். அற்புதமா பண்ணிருக்காங்க.

இவ்வாறு தேவதர்ஷினி பேசினார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close