[X] Close

விஜய்யை ரொம்பப் பிடிக்கும்; ஆனாலும் கேப்பேன்; எவ்ளோ மிரட்டல் வந்தாலும் கேப்பேன்! - கருணாகரன் உறுதி


karunakaran-vijay

விஜய் - கருணாகரன்

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Oct, 2018 14:17 pm
  • அ+ அ-

விஜய் ரசிகர்களிடமிருந்து எத்தனையோ மிரட்டல்கள் வருகின்றன. என் கேள்விகளை, விஜய்க்கே ‘டேக்’ செய்திருந்தேன். ஆனால் எதற்குமே பதிலில்லை. எனக்கு விஜய்யை ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் எவ்வளவு மிரட்டல் வந்தாலும் கேட்டுக்கொண்டேதான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

ரசிகர்களின் சீண்டல் தொடர்பாக, “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று தெரிவித்திருந்தார் கருணாகரன்.  இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டிவருகின்றனர். ரசிகர்கள் சிலர், கருணாகரன் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றெல்லாம் சொல்லி வந்தனர். நான் ரெட் ஹில்ஸ்காரன். ஏன்... ஆந்திராவில் பிறந்தால் தவறா? என்று கேட்டுள்ளார்.

மேலும்  “நான் தமிழ்நாட்டை சேர்ந்தவனா என்ற முட்டாள்தனமான கேள்வியைக் கேட்காதீர்கள் குழந்தைகளே. நான் எப்போதாவது ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று கேட்டேனா. எனது அடுத்த கேள்வி தாய்மொழியில் இருக்கும். சர்கார் அடிமை தயாராக இருக்கிறீர்களா?” என்று தெரிவித்திருக்கிறார். இதனால் விஜய் ரசிகர்கள் இன்னும் கொந்தளித்தார்கள்.

இந்த நிலையில் கருணாகரன், ‘விஜய் சொன்ன குட்டிக்கதை எதற்காக? எதன் பொருட்டு சொன்னார்? அவர் குறிப்பிடுவது, சினிமாவையா? அரசியலையா? அதைத் தெளிவாகச் சொல்லுங்கள் என்றுதான் கோபம் எனக்கு. அடுத்து, நாகரீகமே இல்லாமல், மிரட்டி வருகிறார்கள் ரசிகர்கள். அவருடைய ரசிகர்களை கண்ட்ரோலுக்குக் கொண்டுவர முடியாத விஜய், தமிழகத்தை எப்படி கண்ட்ரோலுக்குக் கொண்டு வருவார்?

நான் என்னுடைய கருத்துகளையும் கேள்விகளையும் தைரியமாகப் பதிவு செய்கிறேன். அந்தப் பதிவுகளில், விஜய்யின் பெயரையும் ‘டேக்’ பண்ணுகிறேன். ஆனாலும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதேசமயம் நடிகர் விஜய்யை எனக்குப் பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருடன் போட்டோ கூட எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்தப் போட்டோ எனக்கானது. என் சந்தோஷத்துக்கானது. அதை வெளியிடவிரும்பவில்லை நான்.

என் நெருங்கிய நண்பர்கள் என்னிடம், வேண்டாமே இதெல்லாம் என்றார்கள். ஏன்... பயந்துபோகணுமா என்று கேட்டேன். சி.எம்.க்கே கேள்வி கேட்டோம்தானே. அப்படியிருக்கும் போது இவங்களுக்கு பயந்துக்கிட்டு பேசாம இருக்கணுமான்னு கேட்டேன். மிரட்டல் விடுறாங்க. நான் ஆந்திரால பொறந்தவன்னு சொல்றாங்க. நான் ரெட் ஹில்ஸ்காரன். அதுசரி, ஆந்திரால பொறந்தா தப்பா? குற்றமா? விஜய்யும் நடிகர், நானும் நடிகர். ஒரு சினிமாக்காரனா இருந்துக்கிட்டு, அவர்கிட்ட இப்படியெல்லாம் கேள்வி கேப்பாங்கன்னு நினைச்சுப் பாத்திருக்கமாட்டாங்க. ஆனா எதுக்குமே தெளிவா பதில் சொல்லலை விஜய். அது எனக்கு வருத்தம்தான்!

இவ்வாறு கருணாகரன் தெரிவித்துள்ளார்

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close