[X] Close

'சர்கார்' தமிழ் தலைப்பா? - விஜய்யை தொடர்ச்சியாக சீண்டும் கருணாகரன்


karunakaran-tweets-again-about-sarkar

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 17:11 pm
  • அ+ அ-

'சர்கார்' தமிழ் தலைப்பா என்று மீண்டும் ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் கருணாகரன் 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றது. இவ்விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், “குட்டி கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா.” என்று தெரிவித்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது.

இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள். ரசிகர்களின் சீண்டல் தொடர்பாக, “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று தற்போது தெரிவித்திருக்கிறார் கருணாகரன்.

கருணாகரன் ட்வீட்டைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தன. இந்த விவகாரம் தொடர்பாக கருணாகரன் “நான் தமிழ்நாட்டை சேர்ந்தவனா என்ற முட்டாள்தனமான கேள்வியைக் கேட்காதீர்கள் குழந்தைகளே. நான் எப்போதாவது ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று கேட்டேனா. எனது அடுத்த கேள்வி தாய்மொழியில் இருக்கும். சர்கார் அடிமை தயாராக இருக்கிறீர்களா?” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ட்வீட்டால் விஜய் ரசிகர்கள் மீண்டும் கோபமடைந்துள்ளனர். 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close