[X] Close

​​​​​​​Venom -திரை விமர்சனம்


venom-review

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 16:45 pm
  • அ+ அ-

’லைஃப் பவுண்டேஷன்’ என்னும் நிறுவனம் விண்வெளியில் புதிய உயிர்களை தேடி ஆராய்ச்சி மேற்கொள்கிறது. அந்த ஆய்வில் 4 விதமான ’சிம்பியாட்’ எனப்படும் வேற்றுகிரக உயிரினங்களை கண்டுபிடிக்கிறது. அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு பயணப்படுகையில் உயிரினங்களை ஏற்றி வந்த விண்கலம் விபத்துக்குள்ளாகிறது. அதிலிருந்து ஒரு ’சிம்பியாட்’ உயிரினம் ஒரு பெண் போலீசின் உடலில் புகுந்து தப்பித்து விடுகிறது. மீதமிருக்கும் 3 உயிரினங்களை மீட்கும் லைஃப் ஃபவுண்டேஷன் நிறுவனம் அவற்றை சான் பிரான்சிஸ்கோவிலுள்ள தனது ஆராய்ச்சி கூடத்திற்க்கு கொண்டு வருகிறது. 

தொலைகாட்சி நிருபரான எட்டீ ப்ராக் (Eddie brock) ஒரு நிகழ்ச்சிக்காக லைஃப் பவுண்டேஷன் தலைமை அதிகாரி கார்ல்டன் ட்ரேக் என்பவரை பேட்டியெடுக்கிறார். அந்நிறுவனத்தின் சில ரகசிய தகவல்களை தன் காதலியின் லேப்டாப்பிலிருந்து திருடி கசிய விட்டதால் எட்டீயும் அவரது காதலியும் தங்கள் வேலைகளை இழக்கின்றனர். 

காதலையும் வேலையையும் இழக்கும் எட்டீ 6 மாதங்களுக்கு பிறகு லைஃப் பவுண்டேஷனின் பிரதான விஞ்ஞானிகளில் ஒருவரான டோராவை சந்திக்கிறார். லைஃப் பவுண்டேஷன் நிறுவனம் சில சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அதை தடுக்குமாறும் கோரிக்கை வைக்கிறார். முதலில் மறுக்கும் எட்டீ பின்னர் ஒப்புக் கொண்டு அங்கு செல்கிறார். டோராவின் உதவியால் உள்ளே நுழையும் எட்டீ ’சிம்பியாட்’ உயிரினத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணால் தாக்கப்படுகிறார். பின்னர் அந்த பெண்ணின் உடலிலிருக்கும் ’சிம்பியாட்’ எட்டீயின் உடலில் நுழைந்து விடுகிறது.

பின்பு அங்கிருந்து தப்பிக்கும் எட்டீ தனக்குள் இன்னொரு குரல் கேட்பதை உணர்கிறார். அதன் பெயர் வெனம் (venom) என்பதையும் அதன் நோக்கம் என்ன என்பதையும் தெரிந்து கொள்கிறார் எட்டீ.

வெனம் நோக்கம் நிறைவேறியதா? எட்டீயின் உடலிலிருந்து வெனம் வெளியேறியதா? தப்பிச் சென்ற இன்னொரு சிம்பியாட் என்னவானது என்பதை பரபரப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் வெனம். ஏற்கெனவே ஸ்பைடர்மேன் மூன்றாம் பாகத்தில் நாம் பார்த்த வில்லன் Venom தான் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரம்

ஸ்பைடர்மேன் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் உரிமை சோனி நிறுவனத்திடம் இருப்பதால் நேரடி மார்வெல் வெளியாகாமல் சோனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம். வழக்கமான மார்வெல் படங்களில் இருக்கும் அந்த கலர்ஃபுல் டோன் இதில் மிஸ்ஸிங். டிசி படம் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகம் ஏற்படும் அளவுக்கு படம் முழுக்க இருட்டு.

முதல் 20 நிமிட கதாபாத்திர அறிமுகம் ஆமை வேகத்தில் நகர்கிறது. அதன் பிறகு சூடு பிடிக்கும் படம் இறுதி காட்சி வரை பரபரப்பு குறையாமல் செல்கிறது. மார்வெல் காமிக்ஸின் கொடூர வில்லனான வெனம் இந்த படத்தில் எப்படி நல்ல கதாபாத்திரமாக காட்டப்படுகிறது என்பதற்கு விடையில்லை. 

ஒரு சூப்பர் ஹீரோ படத்துக்கு எது தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரூபன் ஃப்ளெச்ஸெர். படத்தின் ஹீரோவாக டாம் ஹார்டி. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோரை அள்ளுகிறார்.

மார்வெல் படங்கள் அளவுக்கு பிரம்மாணடமாக இல்லையென்றாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது venom.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close