[X] Close

கவிதை மாதிரியான படம் '96': பாடலாசிரியர் உமாதேவி நெகிழ்ச்சி


umadevi-speech-at-96-success-meet

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 15:17 pm
  • அ+ அ-

கவிதை மாதிரியான படம் '96' என்று நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடலாசிரியர் உமாதேவி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘96’ படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இதில் விஜய்சேதுபதி, இயக்குநர் ப்ரேம்குமார், சின்மயி, பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியுடன் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இருப்பதால் த்ரிஷா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

'96' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் பாடலாசிரியர் உமாதேவி பேசியதாவது:

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது அற்புதமான நிகழ்வு என்றே சொல்லலாம். இயக்குநர் ப்ரேம்குமாருக்கு நன்றி. இந்தப் படத்தின் கதையைச் சொல்லும் போதே, எனக்குள் ஒரு வலியை உணர்ந்தேன். அந்த வலியை உள்வாங்கிக் கொண்டே, பாடலின் வரிகளை எழுதினேன். 
அந்தப் பாடல் வரிகள், கவிதைகளாகவே வந்தன. அந்தக் கவிதைகளுக்கு இசையால் இன்னும் உயிரூட்டினார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த். அதேபோல படத்தில், பாடல்களைப் படமாக்கிய விதமும் கவிதையாகவே பண்ணியிருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார்.

விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த 96 படம்  மிகப்பெரிய வெற்றியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நினைக்கும் போதே, நெஞ்சம் நெகிழ்கிறது.

இவ்வாறு பாடலாசிரியர் உமாதேவி பேசினார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close