[X] Close

தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார்: ஸ்டாலின் புகழாரம்


stalin-appalasue-pariyerum-perumal-team

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 10:24 am
  • அ+ அ-

'பரியேறும் பெருமாள்' பார்த்துவிட்டு, “தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார்” என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. பா.ரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், சமூகவலைத்தளத்தில் பலரும் இப்படம் குறித்த தங்களுடைய விமர்சனங்கள், கருத்துகள் என வெளியிட்டு வருகிறார்கள்.

சமீபமாக இப்படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்களும் பார்த்து பாராட்டு வருகிறார்கள். இந்நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ படத்தை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டது.

அவருடன் துர்கா ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் , கிருத்திகா உதயநிதி மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் படத்தைப் பார்த்தார்கள். படம் முடிவடைந்தவுடன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரையும் வெகுவாக பாராட்டினார்.

'பரியேறும் பெருமாள்' குறித்து "தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த சிறந்தபடம் . திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “இரட்டை குவளையால் ஊர் என்றும் சேரி என்றும் பிரித்த நிலத்தில் , அதே இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் "பரியேரும் பெருமாள் " வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close