[X] Close

ரசிகர்களை முன்வைத்து விஜய்யை மறைமுகமாக மீண்டும் சீண்டிய கருணாகரன்


karunakaran-again-tweeted-about-vijay-fans-creates-trouble

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 09:36 am
  • அ+ அ-

சமூகவலைத்தளத்தில் ரசிகர்களின் பின்னோட்டங்களை முன்வைத்து மீண்டும் விஜய்யை மறைமுகமாக சீண்டியுள்ளார் கருணாகரன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் மிகப்பிரம்மாண்டமாகவே நடத்திக் காட்டினார்கள். 

இவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், “குட்டி கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா.” என்று தெரிவித்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது.

இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள். ரசிகர்களின் சீண்டல் தொடர்பாக, “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று தற்போது தெரிவித்திருக்கிறார் கருணாகரன்.

இந்த ட்வீட்டால் விஜய் ரசிகர்கள் மீண்டும் கோபமடைந்துள்ளனர். இதனால் மீண்டும் அவரை திட்டித் தீர்க்கத் தொடங்கியுள்ளனர். 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close