[X] Close

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது: நடிகை ரஞ்சனி


actor-ranjani-against-sabarimala-verdict

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Oct, 2018 08:58 am
  • அ+ அ-

அந்த நிலாவத்தானே... என்று முதல் மரியாதை படத்தின் பாடல் மூலம் பிரபலமான நடிகை ரஞ்சனி சபரிமலை தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இவரது பூர்வீகம் கேரளா. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், "உச்ச நீதிமன்றத்தின் இந்தத்  தீர்ப்பை நான் ஆச்சரியமாகவே பார்க்கவில்லை. ஏனென்றால் வட இந்தியர்களுக்கு ஐயப்பனையும், தெரியாது.  நம் வழிபாட்டு முறைகளும் தெரியாது. 

நம் வழிபாட்ட முறை, ஆன்மிக முறை பற்றி தெரிந்த ஒருத்தர் நீதிபதியாக இருந்திருந்தால், இப்படியொரு முடிவெடுத்திருக்க 
மாட்டார்.

பெண்களை வரவே வேண்டாம் என்று சொல்லவில்லை. 10 வயதுக்குள்ள வாங்க... இல்லன்னா 50 வயதுக்கு மேலே 
வாங்கன்னுதான் சொல்றாங்க... இங்கே ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளாக யோக நிலையில் இருக்கிறார். அவரை தரிசிக்க ஆண்கள் விரதமிருந்து, மனைவியுடன் நெருக்கம் பாராட்டாமல் இருந்து வருகிறார்கள்.

அதனால்தான், சபரிமலையில் இளம் வயது பெண்களால் கவனச் சிதறல் ஏற்படக் கூடாது என்று பெரியோர்கள் இப்படியொரு கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். இது கட்டுப்பாடுதான்... தடை கிடையாது.  இதில் பெண் விடுதலை எங்கே இல்லாமல் போனதென்று எனக்கு புரியவில்லை என்று" தெரிவித்தார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close